கூந்தல் உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கணுமா? இவற்றை செய்தாலே போதும்
Hair Growth
By Kishanthini
பல பெண்கள் சந்திக்கு முக்கிய பிரச்சினைகளுள் கூந்தல் உதிர்வும் ஒன்றாகும். ஒருவருக்கு அழகைக் கூட்டுவதில் முக்கியமானது தலைமுடி.
ஆரோக்கியமான, அடர்த்தியான கூந்தல் வேண்டும் என ஆசைப்படாதவர்கள் யாருமில்லை.
அதற்காகவே கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்து, கண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனாலும், பலருக்கு முடி உதிர்வது குறைந்திருக்காது.
இதனை எளியமுறையில் போக்க ஒரு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.
- சாதாரண சீப்பைப் பயன்படுத்தினால், முடி உதிர்வு அதிகமாக இருக்கும். ஆகையால் இவர்கள், பெரிய பற்கள் கொண்ட, மரத்தால் தயாரிக்கப்பட்ட சீப்பு பயன்படுத்துவதே சிறந்தது.
- வாரத்தில் இரண்டு நாட்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.
- தலையில் அதிகமாக எண்ணெய் பூசிக்கொண்டு வெளியே சென்றால், தூசி, புழுதி போன்றவை ஒட்டிக்கொண்டு பொடுகு உருவாகும். எனவே, எண்ணெய் தேய்த்த ஒரு மணி நேரத்திலேயே, அதை ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு முழுவதுமாக சுத்தப்படுத்த வேண்டும்.
- அரிசி ஊற வைத்த தண்ணீரைத் தலையில் பூசி 10 நிமிடங்கள் ஊற வைத்துக் குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
- இரண்டு நெல்லிக்காய்கள் மற்றும் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். இதை தினமும் தொடர்ந்து பருகி வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
- கறிவேப்பிலையை நிழலில் உலர வைத்து, பொடியாக்கி, சாதத்துடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், முடி உதிர்வு குறையும்.
-
நெல்லிக்காய்கள் 3
கறிவேப்பிலை (உலர்ந்தது) , ஒரு கைப்பிடி
கரிசலாங்கண்ணி கீரை ஒரு கைப்பிடி,
செக்கு மூலம் தயாரிக்கப்பட்ட தேங்காய்
எண்ணெய் - ஒரு டம்ளர்,
செக்கு மூலம் தயாரிக்கப்பட்ட
விளக்கெண்ணெய் அரை டம்ளர்
மேலே குறிப்பிட்ட அனைத்தையும் இரும்புச் சட்டியில் போட்டு மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். கலவையில் இருந்து நுரை பொங்கி வந்ததும், அடுப்பை அணைத்து விடலாம். இதை இரும்புச் சட்டியிலேயே ஒரு நாள் முழுவதும் வைத்திருக்க வேண்டும். பின்பு வடிகட்டி பயன்படுத்தலாம்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US