சருமத்தை மிருதுவாக்கனுமா? ரோஜா இதழ்களை இப்படி பயன்படுத்தி பாருங்க.. விரைவில் பயன் கிடைக்கும்
ரோஜாப்பூ அதிகமாக சரும அழகில் பெரிதும் பங்கு வகிக்கின்றது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க ரோஜா பயன்படுகிறது.
மற்றும் உங்கள் சருமத்தை மிருதுவாக வைத்துக் கொள்ளவும் ரோஜா இதழ்கள் உதவுகிறது. அதுமட்டுமின்றி நாள் முழுவதும் புது பொலிவினை கொடுக்கும்.
இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் சருமத்தில் ஏற்படும் முகப் பருக்களை குறைக்க உதவுகிறது. அந்தவகையில் சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ள ரோஜாப்பூவை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
தேவையானவை
- ரோஜா பூ - 1
- பால் - 1 டீஸ்பூன்
- கோதுமைத் தவிடு - 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ரோஜா பூவின் இதழை நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் கோதுமைத் தவிடு, பால் கலந்து நன்றாக அரைக்கவும்.
இந்தக் கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். பின் 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகம் பொலிவு அடையும்.
சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க, ஒரு சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து வர சருமம் பளபளப்பாக காணப்படும்.