வேகமாக உடம்பை குறைக்கனுமா? 7 நாட்கள் முட்டை இப்படி சேர்த்துகோங்க போதும்!
பொதுவாக முட்டை ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்று.
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தங்களுடைய டயட்டில் முதலில் சேர்த்துக் கொள்வது இந்த முட்டையை தான்.
இதனை தொடர்ந்து ஏழு நாட்களுக்கு சேர்த்து கொள்வது நன்மையே தான் தரும்.
அந்தவகையில் இதனை டயட் திட்டத்தில் கீழ்வரும் வகையில் முட்டையை சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணமுடியும்.
நாள் 1 டயட் திட்டம்
காலை - க்ரில் செய்த தக்காளி, 2 பிரட் துண்டு டோஸ்ட் செய்தது, ஒரு முட்டை ஆம்லெட்,
மதியம் - ஃபிரட் பழங்கள் கொண்ட சாலட் (நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் சிறந்தது)
இரவு - 2 முட்டை, ஒரு ஆரஞ்சு பழம்
நாள் 2 டயட் திட்டம்
காலை - ஒரு கிளாஸ் பழச்சாறு, இரண்டு முட்டை சேர்த்த ஆம்லெட்
மதியம் - ரோஸ்ட் செய்த சிக்கன், ரோஸ்ட் செய்த தக்காளி
இரவு - 2 முட்டை, சாலட், க்ரேப் ஃப்ரூட் ஜூஸ்,
நாள் 3 டயட் திட்டம்
காலை - ஒரு வேகவைத்த முட்டை, ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ்
மதியம் - இரண்டு வேகவைத்த முட்டை, ஃப்ரூட் சாலட்
இரவு - க்ரில் செய்த சிக்கனுடன் வெள்ளரிக்காய் சாலட்
நாள் 4 டயட் திட்டம்
காலை - 2 வேகவைத்த முட்டை
மதியம் - ஃபிரஷ்ஷான பழங்கள்
இரவு - க்ரில் சிக்கன், வெஜிடபிள் சாலட்
நாள் 5 டயட் திட்டம்
காலை - 2 பிரட் துண்டுகளுடன் இரண்டு வேகவைத்த முட்டை,
மதியம் - வதக்கிய தக்காளியுடன் இரண்டு வேகவைத்த முட்டை
இரவு - க்ரில் செய்யப்பட்ட மீன் மற்றும் வெஜிடபிள் சாலட்
நாள் 6 டயட் திட்டம்
காலை - ஒரு வேகவைத்த முட்டை
மதியம் - ஃப்ரஷ்ஷான பழங்கள்,
இரவு - ரோஸ்டடு சிக்கன், வேகவைத்த முட்டையுடன் வதக்கிய கேரட், பீன்ஸ்
நாள் 7 டயட் திட்டம்
காலை - 2 முட்டை சேர்த்து செய்த ஸ்கிராம்பல்டு முட்டை, தவா ஃப்ரை செய்த தக்காளி
மதியம் - அரை கப் கீரையுடன் 2 வேகவைத்த முட்டை
இரவு - க்ரில் சிக்கன் மற்றும் சாலட்