கொரோனா வைரஸ் கண்ணீர் வழியாக பரவுகிறதா? ஆய்வில் வெளிவந்த புதியதகவல்
கொரோனா வைரஸ் வாயின் உமிழ்நீர் வழியாக பரவுகிறது என பார்த்தோம். இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து சில திடுக்கிடும் ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
பாதிக்கப்பட்ட நோயாளியிடம் இருந்து கண்ணீர் மூலமாகவும் இது பரவக்கூடியது என கூறப்படுகிறது.
ஆய்வில் கூறுவது என்ன?
சோதனையில் கொரோனா வைரஸில் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரானது சோதனை செய்யப்பட்டது. அப்போது கண்ணீரில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர் மூலம் 17.5 சதவீதம் கொரோனா பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என கண்டறியப்பட்டுள்ளது.
இதே போல மற்றொரு அமைப்பும் கண் குறித்து பரிசோதனை செய்தது. அந்த ஆய்விலும் கண்ணீர் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என கூறப்பட்டது.
கண்களால் கொரோனா எவ்வாறு பரவுகிறது?
கொரோனா வைரஸ் சுவாசம் வழியாக பரவுவதை போலவே கண்ணீர் வழியாகவும் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் கண்களை தொடுதல், கண்ணீரை தொடுதல் அல்லது முகத்தில் கண்ணீர் இறங்கிய இடங்களை தொடுதல் போன்றவற்றால் வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது.
மேலும் மற்றவர்களிடம் இருந்து நம்மிடமும் இது கண்ணீர் வழியே பரவுகிறது. அதாவது கொரோனா உள்ள ஒருவர் நமது கண்களை தொடுவதன் மூலம் நமக்கும் அது பரவுகிறது.
யாருக்கு பரவ வாய்ப்புள்ளது?
- கண் மருத்துவர்கள்
- பார்வை மருத்துவம் தொடர்பான துறைகளில் உள்ளவர்கள்
- மேக்கப் செய்பவர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் கண்ணீர் மூலமாக பாதிக்கப்படாத நபருக்கு தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இது பரவுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவே.
இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் பாதுக்காப்பாக இருக்க சில முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.