தலைமுடி ரொம்ப கொட்டுதா? இதனை தடுக்க என்ன செய்யலாம்?
hair tips
home remedies
By Kishanthini
தலைமுடி உதிர்வு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
தலைமுடி பிரச்சனைகளானது நாம் உண்ணும் உணவு, வாழ்க்கை முறை மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளுடன் நேரடி தொடர்புடையவை.
மேலும் இது ஒருவர் அதிக மன அழுத்தத்தில் இருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம். இவற்றை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது நல்லதாகும். ஏனெனில் நாளாடைவில் அதிக முடி உதிர்வினை ஏற்படுத்தி விடும். இதற்கு ஒரு சில இயற்கை வழிமுறைகள் உள்ளன.
அந்தவகையில் தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபட என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதை பார்ப்போம்.
- தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் ஒரு மணிநேரம் கழித்தோ அல்லது ஒரு இரவு முழுவதும் ஊற வைத்த பின்போ தலைமுடியை அலசலாம்.
- வெங்காய சாற்றினை தலையில் தடவி நன்கு ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வெங்காய சாறுடன் தேனை சேர்த்துக் கொள்ளலாம்.
- ஒரு முட்டையை பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
- நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுவது மட்டுமல்லாமல், நெல்லிக்காய் சாற்றுடன், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தலையில் தடவி நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
- மருதாணியின் இலைகளை நன்கு மென்மையாக அரைத்தோ அல்லது ஹென்னா பவுடரையோ நீரில் பேஸ்ட் போல் கலந்தோ, தலையில் தடவி நன்கு காய்ந்த பின், தலைமுடியை நீரில் அலச வேண்டும்.
- கற்றாழையின் ஜெல்லை எடுத்து, தலைச்சருமம் மற்றும் முடியில் தடவி குறைந்தது 45 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
- வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நன்கு அரைத்து, தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு எதுவும் பயன்படுத்தாமல் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை என ஒரு மாதத்திற்கு பின்பற்றி வந்தால், தலைமுடி உதிர்வது கட்டுப்படும்.
- தேங்காயை நீர் ஊற்றி அரைத்து, வடிகட்டி பால் எடுத்து, தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20-30 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நீரில் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- தினமும் பீட்ரூட்டை அன்றாட உணவில் சிறிது சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் சிறிது பீட்ரூட் இலைகளை ஒரு கப் நீரில் போட்டு, நீர் பாதியாக குறையும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, பின் அந்த இலையை அரைத்து, அத்துடன் ஹென்னா பவுடரை சேர்த்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், தலைமுடி உதிர்வது கட்டுப்படும் மற்றும் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US