உங்க முகம் பிரகாசமாக ஜொலிக்கனுமா? இதை மறக்கமால் பண்ணுங்க போதும்
Skin Care
By Kishanthini
பொதுவாக வெயிற்காலங்களில் பலருக்கு முகம் பிரகாசமிழந்து பொலிவின்றி காணப்படும். இதற்கு சூரியகதிர்களே காரணம்.
இழந்துபோன பொலிவை மீண்டும் திருப்பி எடுக்க ஏராளமான வழிகள் உள்ளன. அதில் இயற்கை வழிகளே சிறந்தது.
அந்தவகையில் முகத்தினை பொலிவாக மாற்ற ஒரு சில இயற்கை வழிகளை பார்ப்போம்.
- பச்சை பாலை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் காய வைத்து கழுவலாம். இதனால் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் நீங்கி, மென்மையாக இருக்கும். தினமும் இதை செய்யலாம்.
- 5 அல்லது 6 பாதாமை எடுத்து அரைத்து முகத்திற்கு பேக் போடலாம். இது முகத்தை பளபளவென்று வைப்பதோடு, பேசியல் செய்தது போன்று ஜொலிக்கும்.
- பால் சூடுபடுத்தும் போது மேலே ஆடைக் கட்டும். அதை எடுத்து நன்கு ஆரவிட்டு முகத்தில் பூசி மசாஜ் செய்யலாம். இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, முகம் பிரகாசமாக இருக்கும்.
- ஒரு கிண்ணத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து ஆவி(வேது) பிடிக்கலாம். மாதம் ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் படியும் அழுக்குகள் நீங்கும். முகப்பரு அதிகம் இருப்பவர்கள் வெந்நீரில் ஒரு கைப்பிடி துளசி மற்றும் வேப்பிலை போட்டு வேது பிடிக்கலாம்.
-
பழத்த பப்பாளி பழத்தை கூழாக்கி ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசலாம் அல்லது வாழைப்பழ கூழையும் உபயோகிக்கலாம். இது இயற்கை ப்ரூட் பேசியல்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US