உங்கள் முடி வறட்சியாக இருக்குதா? அதனை போக்க முட்டை இப்படி பயன்படுத்தினாலே போதும்
முட்டை முழுக்க முழுக்க புரதத்தால் ஆனது. இது நம்முடைய உடலுக்குத் தேவையான புரதச் சத்துக்களைக் கொடுப்பதோடு மட்டுமின்றி தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது.
அதிலும் வறட்சியான முடி உடையவர்களுக்கு முட்டை ஹேர்மாஸ்க் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
அந்தவகையில் இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- முட்டையின் வெள்ளைக்கரு - 2
- பாதாம் ஆயில் - 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை
முட்டையின் வெள்ளைக் கருவுடன் தேங்காய் எண்ணெய்யும் பாதாம் எண்ணெய்யும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை தலைமுடியின் உச்சந்தலையில் தேய்த்து 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள்.
பிறகு 30 நிமிடங்கள் வரை ஊறவிட்டு ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசுங்கள்.
இந்த மாஸ்க் தலைமுடிக்கு நல்ல கண்டிஷ்னராக செயல்படும். வறட்சி நீங்கும். இந்த மாஸ்க்கை பயன்படுத்திய பின் தலைமுடிக்கு கன்டிஷ்னர் பயன்படுத்தாதீர்கள்.