நான் அதை நம்பவே இல்லை... கொரோனா தோற்றம் தொடர்பில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் விளக்கம்
சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவானதாக தாம் நம்பவில்லை என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
ஆனால், அது தொடர்பான புது ஆதாரங்களுக்காக தாம் காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அரிய வனவிலங்குகளை கொன்று ஆய்வு மேற்கொண்டதன் ஊடாக கொரோனா தொற்று மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என பிரித்தானிய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளதன் சாத்தியங்களையும் தள்ளிவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வெளியே பரவியது தொடர்பில் வெளியாகியுள்ள பல ஆய்வுகளையும் தாம் வாசித்து வருவதாக கூறியுள்ள ஜோன்சன்,
எதையும் திறந்த மனதுடன் அணுக வேண்டும் என்பதே, தமது முடிவு எனவும், அதையே முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.