நாய் கடித்ததில் சிதலமடைந்த பெண்ணின் முகம்: பிரித்தானியாவில் 40 வயது நபர் கைது
பிரித்தானியாவில் பெண் ஒருவரை நாய் கடித்த சம்பவத்தில் அதன் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணை தாக்கிய நாய்
பிரித்தானியாவின் ஸ்கெக்னஸ்(Skegness) பகுதியில் டிரம்மண்ட் சாலையில் சனிக்கிழமை மாலை 7.28 மணியளவில் பெண் ஒருவரை நாய் கடித்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பெண்ணுக்கு நாய் கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் கைது
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட நாயை கைப்பற்றும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
நாயின் உரிமையாளரான 40 வயது மதிக்கத்தக்க நபரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
அவர் மீது ஆபத்தை ஏற்படுத்த கூடிய வகையில் நாய் வளர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |