கனடாவுக்கு செல்லும் அதிர்ஷ்டத்தை பெற்ற தெரு நாய்! நடந்தது என்ன? ஒரு சுவாரசிய பின்னணி
இந்தியாவில் விபத்துக்குள்ளான தெரு நாய்க்கு கனடாவுக்கு செல்லும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
கர்நாடகாவின் பல்லாரி நகரின், ரேடியோ பார்க் அருகில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 2 மாத நாயக்குட்டி, காரில் சிக்கி விபத்துக்குள்ளானது.
இதையறிந்த ஹியூமன் வேர்ல்டு பார் அனிமல்ஸ் என்ற அமைப்பு, அந்த நாயை மீட்டு பெங்களூரு, சென்னையில் சிகிச்சையளித்தனர்.
இது பலனளிக்காத நிலையில் டில்லிக்கு கொண்டு சென்று, அங்கு பிராணிகளை பாதுகாக்கும், 'கண்ணன் அனிமல் வெல்பேர்' அமைப்பின் மூலம் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் நாயின் உடல்நிலை தேறியது.
நாய்க்கு தற்போது, 2 வயதாகிறது. நாயைப்பற்றி அமைப்பினர் சமூக வலைதளங்களில், தகவல் வெளியிட்டிருந்தனர்.
இதை கவனித்த கனடாவை சேர்ந்த பெண் ஒருவர், நாயை தத்தெடுக்க முன் வந்துள்ளார். அந்த நாய்க்கு, 'அனந்த்யா' என பெயரிடப்பட்டுள்ளது. இதை கனடாவுக்கு கொண்டு செல்ல பாஸ்போர்ட் தயாராகி வருகிறது.