நாயை தலைகீழாக கட்டிவைத்து கட்டையால் அடித்து சித்ரவதை செய்து கொன்ற கொடூரம்! பதறவைக்கும் வீடியோவின் பின்னணி
கேரளாவில் நாய் ஒன்று தலைகீழாக கட்டிவைத்து, கட்டையால் அடித்து சித்ரவதை செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள அடிமலதுராவைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ். இவரும், இவருடைய சகோதரர்களும் சேர்ந்து கறுப்பு நிற லாப்ரடார் என்ற இனத்தைச் சேர்ந்த நாயை புருனோ என பெயரிட்டு கடந்த 8 வருடமாக வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இந்த நாய் காணாமல் போனது. இந்த நிலையில் மூன்று கொடூர மனம் படைத்தவர்கள் புருனோவை இரக்கமின்றி கொலை செய்துள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
This is heartbreaking!
— Baisakh Kumar Das (@DasBaisakh) July 1, 2021
Wishing for same death penalty for this all mf's.
#JusticeForBruno pic.twitter.com/d62syDlVGg
இந்த வீடியோவை நபர் ஒருவர் எடுத்து கிறிஸ்துராஜுக்கு அனுப்பிய நிலையில் அவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
அந்த வீடியோவில் படகில் நாயை தலைகீழாக கட்டி வைத்து மூன்று பேரும் கட்டையால் கொடூரமாக தாக்குகிறார்கள். இப்படி சித்திரவதை செய்ததில் அந்த நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது, இதன்பிறகு நாயை தூக்கில் கடலில் வீசியுள்ளனர்.
இது தொடர்பான புகாரில் சுனில், சில்வஸ்டர் மற்றும் மைனர் சிறுவன் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
We don’t have any rules for I’ll treating animal in our country ?#JusticeForBruno #JusticeForBruno pic.twitter.com/plmYhhqXj6
— A.Qadir Qureshi | india ?? (@Aq05583) July 1, 2021
சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் பின் வருமாறு: தங்களின் படகுக்கு கீழே புருனோ நாய் படுத்து தூங்கிய ஆத்திரத்தில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.
இதோடு இந்த வீடியோ வைரலான நிலையில் நாயை எப்படி கொன்றோமோ அதே போல உன் குடும்பத்தையும் கொல்வோம் என தன்னை மிரட்டியதாக கிறிஸ்துராஜ் கூறியுள்ளார்.
மேலும் புருனோ மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட நாய் எனவும் அருகில் உள்ள கடற்கரைக்கு சென்று படகுக்கு அடியில் படுக்கும் எனவும் கூறியுள்ளார்.
பொலிசார் கூறுகையில், முக்கிய குற்றவாளியான சுனில் கிறிஸ்துராஜ் வீட்டருகில் தான் வசிக்கிறான். இருவருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்துள்ளது என கூறியுள்ளனர்.
இதனிடையில் புரூனோ நாயை கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என #JusticeForBruno என்ற ஹேஷ்டேக் மூலம் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
I don’t have a heart to watch the video and I fail to understand how people can be so cruel?? #JusticeForBruno pic.twitter.com/3E9WrG0Wfr
— Saru Maini (@Saru_Maini) July 1, 2021