பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக... பிரித்தானியாவில் இதைச் செய்வது குற்றமே! அரசு எச்சரிக்கை
பிரித்தானியாவில் பாலஸ்தீனிய கொடிகளை பிடித்து அசைப்பதும், பாலஸ்தீனிய ஆதரவு பாடல்களை பாடுவதும் குற்றச் செயலாக கருதப்படலாம் என பிரித்தானிய அரசு எச்சரித்துள்ளது.
கொலைகளையும் கொண்டாடும் ஒரு கூட்டம்
இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால், அவர்களுடைய சாவையும் கொண்டாடும் ஒரு கூட்டம் சில நாடுகளில் காணப்படுகிறது.
AP
ஜேர்மனியிலும், பிரித்தானியாவிலும், சிலர் பாலஸ்தீனிய கொடிகளை அசைத்தபடி, பாலஸ்தீனிய ஆதரவு பாடல்களை பாடும் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.
பிரித்தானியாவில் இதைச் செய்வது குற்றமாக கருதப்படும்...
இந்நிலையில், பாலஸ்தீனியத்துக்கு ஆதரவான செயல்களைச் செய்வது பிரித்தானியாவில் குற்றச் செயலாக கருதப்படலாம் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் பொலிசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரித்தானிய உள்துறைச்செயலரான சுவெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார்.
அரேபியர்களின் விடுதலையை ஆதரிக்கும் விதத்தில் பாலஸ்தீனிய கொடிகளை பிடித்து அசைப்பதும், பாலஸ்தீனிய ஆதரவு பாடல்களை பாடுவதும் பிரித்தானியாவில் குற்றச் செயலாக கருதப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அப்படிச் செய்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறியுள்ள சுவெல்லா, மீறுவோர் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொலிசாரை அறிவுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |