46 வருடங்களின் பின் இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் - ஜனாதிபதி பெருமிதம்
46 வருடங்களின் பின் இலங்கையின் பண பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
46 வருடங்களின் பின் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்
46 வருடங்களின் பின் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரை ஆற்றும் போதே இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
1977ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக 2023ஆம் ஆண்டில் கொடுப்பனவு இருப்பு மற்றும் நடப்புக் கணக்கு உபரியை அடைய முடிந்துள்ளது.
கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் ரூ.363 ஆக இருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி நேற்று 308 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் மூலம் இலங்கை ரூபாயின் பெறுமதி வலுப்பெற்று இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |