உக்ரைனுக்கு பிரித்தானிய படைகளை அனுப்ப உள்நாட்டிலேயே எதிர்ப்பு: எச்சரிக்கும் ராணுவ தளபதிகள்
உக்ரைனுக்கு பிரித்தானிய படைகளை அனுப்புவது பிரித்தானியாவுக்கே பாதகமாக அமையும் என ராணுவ தளபதிகள் எச்சரித்துள்ளார்கள்.
பிரித்தானிய படைகளை அனுப்ப உள்நாட்டிலேயே எதிர்ப்பு
உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பிரித்தானிய ராணுவ வீரர்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ஆனால், பிரதமரின் அறிவிப்புக்கு பிரித்தானியாவிலேயே எதிர்ப்பு உருவாகியுள்ளது.
உக்ரைனுக்கு ஏராளமான பிரித்தானிய ராணுவ வீரர்களை அனுப்புவதற்கெதிராக, பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களே எச்சரித்துவருகின்றனர்.
பிரித்தானிய ராணுவத்தில் தற்போது சுமார் 70,000 வீரர்கள் மட்டுமே உள்ளனர்.
அவர்களில் ஒரு பகுதியினரை உக்ரைனுக்கு அனுப்பிவிட்டால், பிரித்தானியாவின் எதிரிகள் யாரேனும் பிரித்தானியாவைத் தாக்கினால், பிரித்தானியாவை பாதுகாக்க போதுமான ராணுவ வீரர்கள் இருக்கமாட்டார்கள் என்றும் ராணுவ தளபதிகள் எச்சரித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |