மறந்தும் கூட டீயுடன் நான்கு பொருட்களை சேர்த்து சாப்பிடாதீங்க! ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்
பொதுவாக நம்மில் பலருக்கு டீ குடிக்கும் போது எதையாவது சேர்த்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும். பலருக்கு பிஸ்கட் சாப்பிடும் வழக்கம் உள்ளது.
ஆனால், டீயுடன் சில உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் நிலையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். அது உங்கள் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்று கூறப்படுகின்றது.
அந்தவகையில் டீயுடன் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
டீயுடன் தண்ணீர்
டீயுடன் தண்ணீர் அருந்தக் கூடாது. பலர் தேநீர் அருந்தும்போது தண்ணீர் குடிப்பதால் அவர்களின் உடல்நிலை மோசமடைகிறது.
ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படலாம்.
தேநீருடன் எலுமிச்சை
தேநீருடன் எலுமிச்சை கலந்த உணவுகள், எலுமிச்சை ஆகியவையும் நல்லதல்ல. நீங்களும் தேநீருடன் எலுமிச்சை சாப்பிட்டால், இந்த பழக்கத்தை உடனே மாற்றவும். இது ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
டீயுடன் மஞ்சள் கலந்த உணவுகள்
மஞ்சள் கலந்த உணவு பொருட்களை டீயுடன் உட்கொள்ளக்கூடாது. ஏனென்றால் மஞ்சள் தேநீருடன் ரசாயன எதிர்வினை பெறுகிறது. இது நம் உடலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
டீயுடன் பச்சைக் காய்கறிகள் மற்றும் உலர்ந்த பழங்களை
பச்சைக் காய்கறிகள் மற்றும் உலர் பழங்களையும் தேநீருடன் உட்கொள்ளக் கூடாது. உலர் பழங்களில் காணப்படும் இரும்பு சத்துக்கள், இரசாயன எதிர்வினையை ஏற்படுத்தி நம் உடலில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.