சர்க்கரை நோயாளிகள் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாம்
இன்றைய காலத்தில் உயிரை கொல்லும் நோய்களுள் நீரிழிவு நோய் முதன்மையானதாகும்.
முறையற்ற உணவு பழக்கம், உடல் உழைப்பின்மை, மரபணு போன்ற பல காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது,
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க நாம் முறையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக ஒரு சில உணவுகளை தவிர்ப்பதன் மூலம் இதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். அந்தவகையில் தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- வெள்ளை பிரெட் மற்றும் பாஸ்தா போன்ற உணவு வகைகளில் குறைந்த அளவே நார்ச்சத்தும், அதிகளவில் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. இந்த உணவில் கார்போஹைட்ரேட் அதிகமாகி உள்ளதால் இந்த உணவுகளை நீங்கள் சாப்பிடுவதால் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
- செயற்கையான சுவையூட்டப்பட்ட தயிர் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இதில் நிறைந்துள்ள அதிகமான சர்க்கரை உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.
- செயற்கையான நிறமிகள் கலந்து சுவையூட்டப்பட்ட காபியை குடிப்பது விரைவில் ரத்த சர்க்கரையை உயர்த்தும். இந்த பானத்தில் அதிகளவு சர்க்கரை நிரம்பியுள்ளது. எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.
- பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளில் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது, இதனை நீரிழிவு நோயாளிகளில் சாப்பிடாமல் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- சர்க்கரை சேர்க்கப்படும் பழச்சாறுகளை நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.