புலம்பெயர்தலுக்கு ஆதரவாக இந்திய வம்சாவளி அமைச்சர் முன்வைத்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு...
புலம்பெயர்தலுக்கு ஆதரவாக இந்திய வம்சாவளி அமைச்சர் முன்வைத்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இப்படியே ஆண்டுதோறும் காலியாக இருக்கும் பணியிடங்களை நாம் புலம்பெயர்ந்தோரைக் கொண்டு நிரப்பிக்கொண்டே போனால், 50 ஆண்டுகளுக்குப் பின் நாம் எங்கே இருப்போம் என கேள்வி எழுப்பியுள்ளார் ஒருவர்.
பிரித்தானியாவில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கலாம் என இந்திய வம்சாவளி அமைச்சரான சுவெல்லா பிரேவர்மேன் முதலானோர் முன்வைத்த திட்டத்துக்கு பிரித்தானிய கேபினட் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லாவும், வர்த்தகச் செயலரான கெமி பேடனோக்கும், பிரித்தானியாவில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை புலம்பெயர்ந்தோரைக் கொண்டு தீர்க்கலாம் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளார்கள்.
ஆனால், அவர்கள் சார்ந்த கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர்களே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
புலம்பெயர்தல் விதிகளை நெகிழ்த்துவது எளிது என்று கூறும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Lee Anderson, ஆனால், இப்படியே ஆண்டுதோறும் காலியாக இருக்கும் பணியிடங்களை நாம் புலம்பெயர்ந்தோரைக் கொண்டு நிரப்பிக்கொண்டே போனால், 50 ஆண்டுகளுக்குப் பின் நாம் எங்கே இருப்போம், என கேள்வி எழுப்பியுள்ளார்.
image - thesun