பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம்... ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஐ.எஸ் பயங்கரவாதிகள் குழு தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் சனிக்கிழமை ஈராக் ஒரு பிராந்திய மாநாட்டை நடத்தியது.
இந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஐ.எஸ்-க்கு எதிரான பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாக்தாத்தில் ஈராக் பிரதமர் Mustafa Al Kadhemi-யிடம் பேசிய மக்ரோன், நாம் நம் பாதுகாப்பை குறைக்கக் கூடாது என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஏனெனில் (ஐ.எஸ்) ஒரு அச்சுறுத்தலாக உள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான போராட்டம் உங்கள் அரசாங்கத்தின் முன்னுரிமை என்பதை நான் அறிவேன் என மக்ரோன் கூறியுள்ளார்.
ஈராக் நீண்டகாலமாக ஜிகாதி தீவிரவாதிகளின் தாக்குதல்களை சந்தித்து வருகிறது.
வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில் 170 பேர் கொல்லப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக ஐ.எஸ்-யின் ஆப்கானிஸ்தான் கிளை அமைப்பான ஐ.எஸ்.(கே) அறிவத்தது குறிப்பிடத்தக்கது.