பிரான்ஸ் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
பிரான்சில் வாகனம் ஓட்டுவோர், Toll tax என்னும் சுங்க வரி செலுத்தும்போது உங்கள் மொபைல் போனை பயன்படுத்தி வரி செலுத்தவேண்டாம் என ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுங்க வரி செலுத்தினால் அபராதம்?
ஆம், பிரான்சில் சுங்க வரி செலுத்துவோருக்கு அபராதம் என்னும் ரீதியில் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவருகின்றன.
பிரான்சில் பயணிப்போர், Toll tax செலுத்த மொபைல் ஆப்பை பயன்படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறதாம்.
இதனால், மற்ற நாடுகளிலிருந்து பிரான்ஸ் செல்வோர் குழப்பமடைந்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், பிரான்சில் வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவது குற்றம்.
ஆகவே, நீங்கள் உங்கள் மொபைல் ஆப்பை பயன்படுத்தி Toll tax செலுத்தினால், நீங்கள் வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துவதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
உங்கள் காரின் எஞ்சின் இயங்கிக்கொண்டிருக்கும்போது, காரில் அமர்ந்திருக்கும் நீங்கள் மொபைலை பயன்படுத்துவது பிரான்ஸ் சட்டப்படி குற்றம்.
ஆகவேதான் Toll tax செலுத்த மொபைல் ஆப்பை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறதாம்.
ஆக, பிரான்சில் வாகனம் ஓட்டுவோர், Toll tax என்னும் சுங்க வரி செலுத்தும்போது, உங்கள் மொபைல் போனை பயன்படுத்தி வரி செலுத்தவேண்டாம் என ஒரு எச்சரிக்கப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |