எங்கள் மகளுடைய மரணத்தை வைத்து ஆதாயம் தேடாதீர்கள்: பிரான்சில் புலம்பெயர்ந்த பெண்ணால் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் கெஞ்சல்...
பிரான்ஸ் நாட்டு சிறுமி ஒருத்தி புலம்பெயர்ந்த பெண் ஒருவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அந்த விடயத்தை வைத்து அரசியல் இலாபம் தேட முயல்கின்றன சில அரசியல் கட்சிகள்.
பிரான்ஸ் நாட்டு சிறுமி ஒருத்தி புலம்பெயர்ந்த பெண் ஒருவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்துமாறு, அந்த சிறுமியின் பெற்றோர் வலதுசாரி அரசியல்வாதிகளை கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
Lola (12) என்று அழைக்கப்படும் அந்த சிறுமியை வன்புணர்வுகுள்ளாக்கி கொடூரமாக கொலை செய்ததாக 24 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலம்பெயர்ந்த அந்த அல்ஜீரிய நாட்டுப் பெண், மன நல பாதிப்புகள் உடையவர் என கூறப்படுகிறது. மாணவர் விசாவில் பிரான்சுக்கு வந்த அந்த பெண், அவரது விசாக்காலம் முடிவடைந்த பின்னரும் பிரான்சில் தங்கியதால், 30 நாட்களுக்கு நாட்டை விட்டு வெளியேறுமாறு அவருக்கு ஆகத்து மாதம் உத்தரவிடப்பட்டிருந்தது.
கனசர்வேட்டிவ் மற்றும் வலதுசாரி கட்சிகள் இந்த வழக்கைப் பயன்படுத்திக்கொண்டு, இமானுவல் மேக்ரான் அரசு புலம்பெயர்தல் சட்டங்களை செயல்படுத்தத் தவறிவிட்டதாக குற்றம் சாட்டி வருகிறார்கள். நாடுகடத்தல் உத்தரவுகள் கடுமையாக பின்பற்றப்பட்டிருக்குமானால், அந்த சிறுமியின் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.
சமூக ஊடகங்களில் Lolaவின் புகைப்படங்களும் அவளைக் குறித்த செய்திகளும் வேகமாகப் பகிரப்பட்டுவருகின்றன. அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடத்தில் Lolaவின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், Lolaவின் பெற்றோரோ, தங்கள் மகளுடைய மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்துமாறு அரசியல்வாதிகளை கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.