நாடாளுமன்றத்தில் பேசாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் பேசுவோம்: சீமான் பேச்சு
நாடாளுமன்றத்துக்கு சென்று பேசாவிட்டாலும், மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக பேசி வருகிறோம் என்று நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைக்காத நிலையில் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மைக் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆனால், நாம் தமிழர் கட்சியானது 10 தொகுதிகளில் சராசரியாக 40 ஆயிரம் வாக்குகள், 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. திமுக மற்றும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி இருக்கிறது.
சீமான் பேசியது
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்ட சீமான் பேசுகையில், "நாடாளுமன்றத்துக்கு சென்று பேசாவிட்டாலும், மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக பேசி வருகிறோம்.
தேர்தலில் வெற்றி பெறுவது எங்களது கனவு அல்ல, மக்களின் இதயங்களை, சிந்தனையை வெல்வதுதான் எங்கள் கனவு. அதன்படி நாங்கள் முன்னேறி சென்று கொண்டிருக்கிறோம்.
எங்களின் மீது மிகப்பெரிய கடமையும், பொறுப்பும் சுமத்தப்பட்டுள்ளது. எங்களது இலட்சியத்தை அடைய கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |