தி கோட் பட புரமோஷனுக்காக கட்சி பெயரை பயன்படுத்தாதீங்க! நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு
தி கோட் திரைப்பட புரமோஷனுக்காக கட்சி பெயரை பயன்படுத்தக்கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு தமிழக விஜய் உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.
இந்நிலையில், தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளார்.
விஜய் உத்தரவு
இந்நிலையில், தி கோட் திரைப்பட புரமோஷனுக்காக கட்சி பெயரை பயன்படுத்தக்கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு தமிழக விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்த படத்தில் தற்போதுவரை 3 பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அடுத்த மாதம் 5 -ம் திகதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் படத்திற்கான ப்ரமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படத்தின் புரமோஷனுக்காக தமிழக வெற்றி கழகத்தின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.
படத்திற்காக தயாரிக்கப்படும் பேனர்களில் தமிழக வெற்றிக் கழகம் பெயரை தவிர்த்து தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரையே நிர்வாகிகள் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |