சமையலுக்கு இந்த 5 எண்ணெய்களை மட்டும் பயன்படுத்தாதீர்கள்- உயிருக்கே ஆபத்தாகிவிடும்
உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்று உணவு, உணவுகள் சமைக்க பயன்படும் எண்ணெய்யும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.
சமையல்களில் குறைவான அளவு மட்டுமே எண்ணெயை பயன்படுத்தவும், எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இதனால் கொலஸ்ட்ரால், உடல் பருமன் மற்றும் இதய நோய் பிரச்சனைகள் போன்ற ஏற்படும்.
அந்தவகையில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடாத ஆபத்தான 5 சமையல் எண்ணெய்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் பார்க்கலாம்.
பாமாயில்
பாமாயிலில் செறிவூட்டப்பட்ட கொழுப்புகள் நிறைந்துள்ளதால் இது ஆரோக்கியமற்ற எண்ணெயாக விளங்குகிறது.
பாமாயிலை அதிகமாக உட்கொள்ளும் போது, இதய நோய் பிரச்சனைக்களை ஏற்படுத்துகிறது.
சோள எண்ணெய்
சோள எண்ணெயில், தாவர எண்ணெய் போன்ற, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளது.
உணவில் அதிகப்படியான ஒமேகா -6 கொழுப்பு அமிலங்களை எடுத்துக்கொள்வது உடலின் வீக்கத்திற்கு வழிவகுக்கும்.
சோயாபீன் எண்ணெய்
சோயாபீன் எண்ணெயில் அதிகப்படியான ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கின்றன.
எனவே சோயாபீன் எண்ணெயை மிதமாகப் பயன்படுத்துவது நல்லது.
கனோலா எண்ணெய்
கனோலா எண்ணெயில் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
இந்த கனோலா எண்ணெயை மரபணு மாற்றப்படாத (GMO அல்லாத) வகைகளைத் பயன்படுத்துவது சிறந்தது.
ஆலிவ் எண்ணெய்
மற்ற எண்ணெய்களை காட்டிலும் அதிக வெப்பமான சமையலுக்கு ஆலிவ் ஆயில் ஏற்றது அல்ல.
இந்த எண்ணெயை பயன்படுத்துவதால் ஊட்டச்சத்து மதிப்பைப் பாதுகாக்க மற்றும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களின் வெளியீட்டைத் தடுக்க உதவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |