எரிவாயு பிரச்சினை குறித்தெல்லாம் கவலைப்படாதீர்கள்... எங்கள் நாட்டிற்கு வாருங்கள்: ஜேர்மானியர்களுக்கு அழைப்பு
எரிவாயு பிரச்சினை குறித்தெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்காதீர்கள், பேசாமல் எங்கள் நாட்டுக்கு வந்து விடுங்கள் என ஓய்வு பெற்ற ஜேர்மானியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது கிரீஸ் நாடு!
உக்ரைன் ரஷ்ய பிரச்சினையைத் தொடர்ந்து ரஷ்யா ஜேர்மனிக்கு வழங்கி வரும் எரிவாயுவின் அளவைக் குறைத்துக்கொண்டே வருகிறது.
அதனால், எரிவாயு பற்றாக்குறை நிலவும் நிலையில் குளிர் காலத்தை எப்படி சமாளிப்பது என கவலைப்படத் துவங்கிவிட்டார்கள் ஜேர்மானியர்கள்.
இந்நிலையில், இலையுதிர் காலத்திற்காகவும் குளிர்காலத்துக்காகவும், ஓய்வு பெற்ற ஜேர்மானியர்களை எங்கள் நாட்டுக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கிரேக்க விருந்தோம்பலுடன், மிதமான வெப்பநிலை மற்றும் உயர்தர சேவைகளுடன் உங்கள் குளிர்காலத்தை மத்தியதரைக்கடல் நாடு ஒன்றில் அனுபவிக்கலாம் என கிரீஸ் நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சரான Vasilis Kikilias ஓய்வு பெற்ற ஜேர்மன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எங்கள் நாட்டுக்கு வாருங்கள், நாங்கள் உங்களுக்காக இங்கே காத்திருக்கிறோம் என்கிறார் அவர்.
மேலும், இங்குள்ள வீடுகளை வெப்பப்படுத்தவேண்டிய அவசியமே இல்லை என்று கூறும் Chania நகர மேயரான Panagiotis Simandirakis, கிரீஸ் நாட்டில் எந்த ஜேர்மானியரும் குளிரால் உறைந்துபோகமாட்டார்கள் என்கிறார்.
credit - Nicolas Economou/NurPhoto/Getty Images