மிக விரைவில் அணு ஆயுத சோதனைகளை நடத்துவோம்! டொனால்டு ட்ரம்ப் பகிரங்கம்
அமெரிக்க விரைவில் அணு ஆயுத சோதனைகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் பேசியுள்ளார்.
அணு ஆயுத சோதனைகள்
அணு ஆயுதக் குறைப்புக்கான தனது உறுதிப்பாட்டை அமெரிக்கா அறிவித்தது. அப்போது வேறு எந்த நாட்டையும் விட அதிக அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளது என்றது. 
செய்தியாளர்களுடனான உரையாடலின்போது, சாத்தியமான அணு ஆயுத சோதனைகள் குறித்த கவலைகள் தொடர்பான கூட்டங்களைத் திட்டமிடுகிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த டொனால்டு ட்ரம்ப் (Donald Trump), பிற நாடுகள் செய்வது போல அமெரிக்காவும் இதுபோன்ற சோதனைகளை மிக விரைவில் நடத்தும்.
அமெரிக்கா முன்னணி அணுசக்தி நாடாக உள்ளது. ரஷ்யாவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் சீனா கணிசமாக பின்தங்கியுள்ளது. அதே சமயம் சீனா அமெரிக்காவின் நிலையை அடைய முடியும் என்றார்.
மேலும் அவர், அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ரஷ்யா மற்றும் சீனாவுடனான சந்திப்புக்கு நம்பிக்கை தெரிவித்தார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |