47வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சை பேச்சுக்கள்
அமெரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுக்கள் குறித்து பார்க்கலாம்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப் அதிரடியான உத்தரவுகளை அறிவித்து, முதல் நாளிலேயே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர்
முன்னதாக, மெக்சிகோவில் இருந்து சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுக்க, எல்லை முழுவதும் பெருஞ்சுவர் எழுப்ப வேண்டும் எனக் கூறிய ட்ரம்ப், கொரோனா காலகட்டத்தில் சானிடைசர்களை ஊசி மூலம் உடலுக்குள் நேரடியாக செலுத்திக் கொள்ளலாமே எனவும் கூறி அதிர வைத்தார்.
2016ஆம் ஆண்டில் முதல் முறையாக ஆட்சியில் அமர்ந்த ட்ரம்ப், அரசியல் பின்புலம் மற்றும் ராணுவ பின்புலம் இல்லாமல் ஆட்சியைக் கைப்பற்றிய முதல் ஜனாதிபதி எனும் பெருமையைப் பெற்றார்.
எந்த அமெரிக்க ஜனாதிபதியும் செய்யாத ஒரு விடயத்தை செய்து உலகையே மிரட்டியவர்தான் ட்ரம்ப். அதாவது, வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்-ஐ நேரிலேயே சந்தித்து நட்பு பாராட்டினார்.
ஈரானுடனான சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறிய அவர், பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேறவும் செய்தார்.
இருமுறை கொலை முயற்சி
கடந்த தேர்தலில் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது என ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திலேயே வன்முறையில் ஈடுபட்டனர்.
தேர்தல் பரப்புரைகளின்போது 2 முறை கொலை முயற்சிகளை ட்ரம்ப் எதிர்கொண்டது உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது.
ஆனாலும் 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே..' எனும் தனது கொள்கையை முன்நிறுத்தி வெற்றி பெற்றார். தற்போது இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வந்த சூழலில், ட்ரம்பின் எதிர்வரும் நடவடிக்கைகளால் இன்னும் என்னவெல்லாம் மாற்றங்கள் வரும் என்பதை உலகமே எதிர்நோக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |