கூரையில் அமர்ந்திருந்த சந்தேக நபர்: பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மன்னர்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியைக் கொலை செய்ய ஒருவர் முயன்ற விடயம் உலகம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த மன்னர் சார்லசுக்கும் ராணி கமீலாவுக்கும் ஒரு அபாய எச்சரிக்கை செய்தி வந்தது.
தற்போது அந்த விடயம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மன்னர்
மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் சமீபத்தில் சேனல் தீவுகளுக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார்கள்.
அவர்கள் ஜெர்சி என்னுமிடத்தில் மக்களுடன் அளவளாவிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு செய்தி வந்தது.
அதைத்தொடர்ந்து, மன்னரும் ராணியும், அவசர அவசரமாக பக்கத்திலிருந்த ஹொட்டல் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
வெளியாகியுள்ள விவரம்
இந்நிலையில், அன்று என்ன நடந்தது, எதனால் மன்னரும் ராணியும் அவசர அவசரமாக பாதுகாப்பான இடம் ஒன்றிற்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
ட்ரம்பை சுட்ட தாமஸ் க்ரூக்ஸ் என்பவர், கட்டிடம் ஒன்றின் கூரையில் மறைந்திருந்து அவரை சுட்ட நிலையில், அதேபோல ஒருவர் கூரை ஒன்றின்மேல், மன்னரையும் ராணியையும் பார்த்தபடி அமர்ந்திருப்பதை மன்னருடைய பாதுகாப்பு அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்துதான் மன்னரும் ராணியும் அவசர அவசரமாக பாதுகாப்பான இடம் ஒன்றிற்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள்.
பின்னர் அந்த நபரை அதிகாரிகள் விசாரித்தபோது, அவரால் எந்த ஆபத்தும் இல்லை என தெரியவந்ததும், அவரை அதிகாரிகள் விடுவித்துள்ளார்கள்.
இதற்கிடையில், ட்ரம்பை சுட்டவர், தனது மொபைலில் இளவரசி கேட்டின் புகைப்படங்களை சேமித்துவைத்திருந்தது குறித்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |