தாக்குதல் நடந்த இடத்தில் மீண்டும் பிரமாண்ட பேரணிக்கு தயாரான டிரம்ப்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் (Donald Trump) முக்கிய முடிவை அறிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் தாக்கப்பட்ட பென்சில்வேனியாவில் மீண்டும் மாபெரும் பேரணியை நடத்தவுள்ளதாக அவரது சமூக ஊடக கணக்கு மூலம் அறிவித்துள்ளார்.
டிரம்ப் தனது அறிவிப்பில், “நான் சமீபத்தில் சுடப்பட்ட இடத்தில் பேரணி நடத்தப் போகிறேன். எங்கள் அன்பிற்குரிய தீயணைப்பு வீரர் கோரியின் நினைவாக மாபெரும் பேரணியை நடத்த உள்ளேன்.
இதற்காக பென்சில்வேனியாவின் பட்லருக்கு மீண்டும் செல்கிறேன். இந்த பேரணியின் முழு விவரம் விரைவில் தெரியவரும். விவரங்களுக்கு காத்திருங்கள்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
ஜூலை 13-ஆம் திகதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ட்ரம்ப் தாக்கப்பட்டார். அங்கிருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில் அவர் சிறிது நேரத்தில் உயிர் தப்பினார்.
அந்த தோட்டா டிரம்பின் காதில் பட்டது. டிரம்ப் திரும்பாமல் இருந்திருந்தால், தோட்டா நேராக அவரது தலையில் சென்றிருக்கும். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் முன்னாள் தீயணைப்பு வீரர் கோரே உயிரிழந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Butler, Pennsylvania, Donald Trump was shot at during his rally in Pennsylvania, Donald Trump Rally at Butler, former US President Donald Trump