வரலாற்று சாதனை ஒன்றை படைத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விளையாட்டு போட்டி ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
சூப்பர் பவுல்
இந்தியாவில் IPL டி20 கிரிக்கெட் தொடர் போல், அமெரிக்காவில் பிரபலமான விளையாட்டுத் தொடர் NFL ரக்பி ஆகும்.
இப்போட்டியை நேரடியாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் என பில்லியன் கணக்கான மக்கள் கண்டு ரசிப்பது வழக்கம்.
இந்தத் தொடரின் இறுதிப்போட்டி சூப்பர் பவுல் என்று அழைக்கப்படுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளில் பொதுவிடுமுறை கூட அளிக்கப்படும்.
டொனால்ட் ட்ரம்ப் சாதனை
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சூப்பர் போட்டியைக் காண ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மைதானத்திற்கு வந்தார்.
அதேபோல் லியோனல் மெஸ்ஸி, டாம் பிராட்டி, எலான் மஸ்க், பிராட்லி கூப்பர் உள்ளிட்ட பிரபலங்களும் வந்திருந்தனர்.
மேலும் மைதானத்தில் மொத்தம் 74,000 பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர். இப்போட்டியில் Philadelphia Eagles அணி 40-22 என்ற கணக்கில் Kansas City அணியை வீழ்த்தியது.
சூப்பர் பவுல் நிகழ்ச்சியில் எந்த ஜனாதிபதியும் இதுவரை கலந்துகொண்டதில்லை. ஆனால் ட்ரம்ப் பங்கேற்றதன் மூலம் முதல் அமெரிக்க ஜனாதிபதி எனும் வரலாற்று சாதனையை படைத்தார்.
முன்னதாக, 1980களில் NFL அணியை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு ட்ரம்ப் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |