சர்ச்சைக்குரிய நபருடன் தொடர்பு... கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்: ட்ரம்ப் பயன்படுத்திய வார்த்தையால் சர்ச்சை
சர்ச்சைக்குரிய நபருடன் தொடர்பு குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரை, அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் மோசமான வார்த்தையால் திட்டும் வீடியோ என கருதப்படும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
மோசமான நபருடன் தொடர்பு...
ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவர் அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன்.
விடயம் என்னவென்றால், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடைய நண்பர்தான்.

எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த ஆவணங்கள் விரைவில் முழுமையாக வெளியாக இருக்கின்றன.
இந்நிலையில், பெண் ஊடகவியலாளர் ஒருவர் அது குறித்து ட்ரம்பிடம் கேள்வி எழுப்ப, கோபமடைந்த ட்ரம்ப் அவரைப் பார்த்து, ‘Quiet. Quiet, piggy’ என்று சத்தமிட்டுள்ளார்.
அவர் அந்த ஊடகவியலாளரை நோக்கி விரலை நீட்டி சத்தமிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
மேலும், பொதுவாகவே ட்ரம்ப் பெண்களை மதிப்பதில்லை, பெண் ஊடகவியலாளர்களை மோசமாக நடத்துகிறார் என இன்னொரு பக்கம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
’சத்தத்தை உயர்த்தாதே, உனக்கு அது போதும், சமர்த்தாக இரு, மிரட்டாதே, அந்தப் பெண் சத்தமிடுவதில் அவள் கண்களிலிருந்து இரத்தமே வந்துவிடும்போலிருக்கிறது, அமைதியாக இரு’, இவையெல்லாம் ட்ரம்ப் பெண் ஊடகவியலாளர்களுக்கு எதிராக பயன்படுத்திய வார்த்தைகள் என்று பட்டியலிடுகிறது தி அட்லாண்டிக் என்னும் ஊடகம்.
அந்தக் கேள்வியை எழுப்பிய, சொல்லப்போனால், அவர் அந்தக் கேள்வியை முடிக்கக்கூட இல்லை, அந்த ஊடகவியலாளரின் பெயர், கேத்தரின் லூசி. அவர் ப்லூம்பெர்க் ஊடகத்தின் ஊடகவியலாளர். 20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஊடகவியலாளர் அவர்.
Pres Trump calling the reporter #MissPiggy is disgusting and degrading. It strikes at the core for me since I faced similar shame. One of my Miss America celeb judges William Goldman wrote an entire book calling me "Miss Piggy" saying I had been too fat to win -- at 105 lbs. pic.twitter.com/kxiPFFg3EL
— Gretchen Carlson (@GretchenCarlson) November 18, 2025
இந்நிலையில், ட்ரம்ப் கேத்தரினை நோக்கி சத்தமிட்ட விடயத்தை பல்வேறு பிரபல ஊடகங்களைச் சார்ந்த ஊடகவியலாளர்கள் கண்டித்தும் விமர்சித்தும் வருகிறார்கள்.
இன்னொரு பக்கம், ட்ரம்ப், Piggy என்று கூறவில்லை. அவர் Peggy என்றுதான் கூறினார். அதாவது, இதே ப்லூம்பெர்க் பத்திரிகையின் வாஷிங்டன் பிரிவின் தலைவரும் முதன்மை ஆசிரியருமான Margaret Peggy Collins என்பவரை குறிக்கும் வகையில், Quite Peggy என்றுதான் கூறினார் ட்ரம்ப்.
ஆனால், அவர் கூறிய விடயம், AI உதவியுடன் திரித்துக் கூறப்பட்டுள்ளது என சில பிரபலங்கள் விளக்கமளித்துவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |