கடவுள் என் உயிரை காப்பாற்றியதற்கு ஒரு காரணம் உள்ளது: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
அமெரிக்காவை சிறப்புடையதாக ஆக்குவதற்காக கடவுளால் காப்பாற்றப்பட்டவன் நான் என தன்னைத்தான் புகழ்ந்துகொண்டிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
கடவுளால் காப்பாற்றப்பட்டவன் நான்
அமெரிக்காவின் பொற்காலத்தை மீண்டும் திருப்பிக் கொண்டு வருவதற்காக கடவுள் என்னை காப்பாற்றினார் என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
தன் தலைமையின் கீழ் அமெரிக்காவைப் பார்த்து எல்லா நாடுகளும் பொறாமைப்படும் என்று கூறியுள்ள ட்ரம்ப், எளிமையாகக் கூறினால், ’அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்று கூறலாம் என்கிறார்.
தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், அமெரிக்காவின் பொற்காலம் இன்று துவங்குகிறது என்று கூறிய ட்ரம்ப், நம் நாடு செழிக்கும், உலக நாடுகள் எல்லாவற்றாலும் மதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
எதிராளிகள் என்னுடைய சுதந்திரத்தையும், ஏன், என் உயிரைக் கூட பறித்துக்கொள்ள முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கொல்ல முயன்றவரின் துப்பாக்கிக்குண்டு என் காதை துளைத்துச் சென்றது என்று கூறியுள்ள ட்ரம்ப், அப்போதுதான் நான் உணர்ந்தேன், இப்போது இன்னும் கூடுதலாக நம்புகிறேன், என் உயிர் காப்பாற்றப்பட்டதற்கு ஒரு காரணம் உள்ளது.
அமெரிக்காவை மீண்டும் சிறப்புடையதாக ஆக்குவதற்காக கடவுளால் காப்பாற்றப்பட்டவன் நான் என்கிறார் ட்ரம்ப்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |