புலம்பெயர்ந்தோருக்கு ட்ரம்பிடமிருந்து ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும்
புலம்பெயர்ந்தோருக்கு ட்ரம்ப் ஒரு நல்ல செய்தியையும் ஒரு கெட்ட செய்தியையும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோருக்கு ட்ரம்பிடமிருந்து ஒரு நல்ல செய்தி
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் நாளுக்காக உலக நாடுகள் பல காத்திருகின்றன.
உக்ரைன் போர் உட்பட பல முக்கிய விடயங்கள் தொட்ர்பில் ட்ரம்ப் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதை அறிய உலகம் காத்திருக்கிறது.
இந்நிலையில், ட்ரம்பிடமிருந்து புலம்பெயர்ந்தோருக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்க உள்ளது.
ஆம், குறிப்பாக, The dreamers என அழைக்கப்படும், குழந்தைகளாக இருந்தபோது அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த ஆவணங்களற்ற பெற்றோரால் அமெரிக்காவுக்கு அழைத்துவரப்பட்டவர்களுக்கு நல்லது செய்ய ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது நடுத்தர வயதில் இருக்கும் அந்த புலம்பெயர்ந்தோர், தங்கள் தாய்மொழியைக் கூட பேசுவதில்லை. அவர்கள் கிட்டத்தட்ட அமெரிக்கர்களாகவே வாழ்ந்துவருகிறார்கள்.
அத்தகைய புலம்பெயர்ந்தோருக்கு, தான் எதையாவது செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
ஒரு தரப்பினருக்கு கெட்ட செய்தி
அதே நேரத்தில், சட்டவிரோதமாக அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தோரை பெரிய எண்ணிக்கையில் நாடுகடத்த ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
எல்லை பாதுகாப்பில் தேசிய அவசர நிலை ஒன்றை பிரகடனம் செய்து, அமெரிக்க ராணுவத்தைக் கொண்டு, ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோரை பெரும் எண்ணிக்கையில் நாடுகடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.
இந்த விடயம் குறித்து பேசியுள்ள ட்ரம்ப், அமெரிக்காவுக்கு வர விரும்புவோர், சிறையிலிருந்து வெளியே வருபவர்களாகவோ, கொலை செய்து விட்டு சிறைத்தண்டனை பெற்றவர்களாகவோ இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இதனால், புலம்பெயர்ந்தோரில் ஒரு தரப்பினருக்கு மகிழ்ச்சியும், மற்றொரு தரப்பினருக்கோ திகிலும் உருவாகியுள்ளது என்பதை மறுக்க இயலாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |