இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ள ட்ரம்பின் சொத்து மதிப்பு
இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ள ட்ரம்பின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மாறுபட்ட கருத்துக்கள்
அமெரிக்க ஜனாதிபதியாகியுள்ள டொனால்ட் ட்ரம்பின் சொத்து மதிப்பு குறித்து வெவ்வேறு ஊடகங்கள் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.
2024ஆம் ஆண்டு, அக்டோபர் நிலவரப்படி, ட்ரம்பின் சொத்து மதிப்பு 6.6 பில்லியன் டொலர்கள் என்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை. ஆனால், அதே காலகட்டத்தில் அவரது சொத்து மதிப்பு 7.07 பில்லியன் டொலர்கள் என்கிறது ப்ளூம்பெர்க் பத்திரிகை.
பிறவி கோடீஸ்வரர்
உண்மை எதுவாக இருந்தாலும், ட்ரம்ப் ஒரு பிறவி கோடீஸ்வரர் என்பதை மறுக்கமுடியாது. ஜனாதிபதியானபின் அவர் இவ்வளவு சொத்துக்களையும் சம்பாதிக்கவில்லை.
அவர் ஜனாதிபதியாகும் முன்பே அவரது சொத்து மதிப்பு 2.5 பில்லியன் டொலர்கள் என ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.
விடயம் என்னவென்றால், ட்ரம்பின் தந்தை அவருக்கு இன்றைய மதிப்பின்படி சுமார் 500 மில்லியன் டொலர்களை பரிசு மற்றும் பிற சொத்துக்களாக வழங்கியுள்ளார்.
அவர் அதை முதலீடு செய்திருந்தால், அவரது சொத்து மதிப்பு 2017இலேயே 80 பில்லியன் டொலர்களாக அதிகரித்திருக்கும்!
ரியல் எஸ்டேட், ஹொட்டல் தொழில், ஊடகங்கள் என பல துறைகளில் பங்குகள் மூலம் ட்ரம்புக்கு வருவாய் வருகிறது என்பதையும் குறிப்பிடாமல் இருக்கமுடியாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |