அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரீஸ் வென்றால் அன்னதானம் போடும் தமிழக கிராமம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அன்னதானம் போடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று (நவம்பர் 5) நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் போட்டியிட இருந்த நிலையில் அவர் திடீரென போட்டியிடவில்லை என்று அறிவித்தார்.
இதனால், துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் களமிறங்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட்டார்.
இந்நிலையில், கருத்துக்கணிப்புகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதில், கமலாவுக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தகவல் வந்துள்ளது.
அன்னதானம்
இதில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ், தமிழ்நாடு மாவட்டமான திருவாரூர் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரத்தைப் பூர்வீகமாக கொண்டவர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவரின் மகன் வழிப் பேத்தி தான் கமலா ஹாரீஸ். இதனால் துளசேந்திரபுர கிராமமும் உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டுமென துளசேந்திரபுர கிராம மக்கள் பிரார்த்தனை செய்தனர். மேலும், ஊர் கவுன்சிலர் சார்பில் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் கோயில் சார்பில் ஊருக்கு அண்ணதானம் வழங்கப்படும் என்றும் கவுன்சிலர் தெரிவித்திருக்கிறார். இதனால், கமலா ஹாரிஸின் வெற்றியை ஒட்டுமொத்த கிராமமே எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |