நாவூறும் சுவையில் சிக்கன் தொன்னை பிரியாணி.., எப்படி செய்வது?
குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் இந்த சிக்கன் தொன்னை பிரியாணி மிகவும் பிடிக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் சிக்கன் தொன்னை பிரியாணி எப்படி செய்வது என்று பாரக்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன்- ½ kg
- தயிர்- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- பட்டை- 2 துண்டு
- கிராம்பு- 4
- ஏலக்காய்- 3
- மிளகு- 1 ஸ்பூன்
- வெங்காயம்- 3
- பச்சைமிளகாய்- 4
- கறிவேப்பிலை- 1 கொத்து
- புதினா- 1 கைப்பிடி
- கொத்தமல்லி- 1 கைப்பிடி
- நெய்- 2 ஸ்பூன்
- அண்ணாச்சி பூ- 1
- பிரிஞ்சி இலை- 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- சீரக சம்பா அரிசி - ½kg
- எலுமிச்சை- ½
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சிக்கன், மஞ்சள் தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
அடுத்து இதில் கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கி பின் இதனை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து சூடினாதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி ஊறவைத்த சிக்கன், மல்லி தூள் மற்றும் அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனைதொடர்ந்து இதில் ஊறவைத்த அரிசி, உப்பு, தேவையான அளவு தண்ணீர், எலுமிச்சை சாறு, நெய் சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக அரிசி 90% வெந்ததும் மூடி போட்டு 30 நிமிடம் தம் வைத்து எடுத்தால் சுவையான தொன்னை பிரியாணி தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |