ஒழுங்கா விளையாடமா...மைதானத்தை குறை சொல்லாதீங்க! இந்தியாவை புகழ்ந்து தள்ளிய மேத்யூ ஹைடன்
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன், இந்திய அணி எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடும் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இந்திய அணி தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது.
குறிப்பாக அகமதாபாத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி, இரண்டே நாளில் முடிந்துவிட்டது. இதற்கு மைதானம் தான் காரணம் என்று பலரும் குற்ற சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன், இந்திய அணியிடம் கடுமையான போராட்டக் குணம் உள்ளது.
இவர்களால் எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றிபெற முடியும். காலநிலை இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.
மார்டன் கிரிக்கெட் உலகில் இந்திய அணியை வீழ்த்துவது சுலபமானது அல்ல. இவர்களால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மைதானங்களில் அற்புதமாகச் செயல்பட முடியும்.
அகமதாபாத் மைதானம் தரமற்றது எனப் பலர் குற்றச்சாட்டை முன்வைக்கும் நிலையில், ஹெய்டன் இதை ஏற்க மறுத்துள்ளார்.
விக்கெட்கள் விரைந்து வீழ்த்துவிட்டது என்பதற்காக மைதானத்தைக் குறைசொல்லக் கூடாது. மைதானத்தில் குறை இருப்பதுபோல் எனக்குத் தெரியவில்லை. வெளியில் இருந்து வரும் அணிகள் காலநிலையை, சூழ்நிலையை அறிந்து விளையாட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், ஸ்வீப் ஷாட்களை சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஆட வேண்டும். அதுவும் இந்தியா போன்ற ஸ்பின்னிற்கு சாதகமான மைதானத்தில் ஸ்வீப் ஆடுவதற்கு முன்பு பலமுறை யோசிக்க வேண்டும். பந்துகள் சில சமயம் சுழலாமலும் போகலாம். அதைக் கவனித்து விளையாடினால் மட்டுமே நிலைத்து நின்று விளையாட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
