குழந்தைகளை நாடுகடத்தவேண்டாம்: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை
புதிய புலம்பெயர்தல் சட்டத்தின்கீழ் குழந்தைகளை காவலில் அடைக்கும் அல்லது நாடுகடத்தும் திட்டங்கள் ஏதாவது இருந்தால், அவற்றைக் கைவிடுமாறு பிரித்தானிய அரசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
புதிய புலம்பெயர்தல் சட்டம்
பிரித்தானியா கொண்டு வர இருக்கும் புதிய புலம்பெயர்தல் சட்டம், பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோர் கைது செய்யப்பட்டு அவர்களுடைய சொந்த நாட்டுக்கோ அல்லது ருவாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கோ நாடுகடத்தப்பட்ட வழிவகை செய்ய உள்ளது.
பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு
இந்நிலையில், புதிய புலம்பெயர்தல் சட்டம், குழந்தைகளை கைது செய்யவோ, நாடுகடத்தவோ கூடாது என பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசை எச்சரித்துள்ளனர்.
பெண்கள் மற்றும் சமத்துவக் குழு என்னும் அமைப்பின் தலைவரும், கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான Caroline Nokes, பெண்கள், குழந்தைகள் முதலானவர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்துறை அலுவலகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் தாங்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
புகலிட அமைப்பின் கீழுள்ள குழந்தைகள் நடத்தப்படும் விதம் குறித்து அதிக கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள Caroline Nokes, சட்ட விரோத புலம்பெயர்தல் சட்டத்தின் கீழ், குழந்தைகளை நாடுகடத்தும் நோக்கம் ஏதாவது அமைச்சர்களுக்கு இருந்தால், அதைக் கைவிடவேண்டும் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |