தெரியாம கூட பால் குடிப்பதற்கு முன்/பின் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க! பெரிய பிரச்சினையை ஏற்படுத்துமாம்
நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று.
இதில் கால்சியம், வைட்டமின் ஏ, பி12, ரிபோஃப்ளேவின், பாஸ்பரஸ், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் உடல் செயல்பாட்டிற்கு அவசியமானவை.
இது பல ஆரோக்கிய பிரச்சினைக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது. இருப்பினும் பாலுடன் ஒருசில உணவுப் பொருட்களை சேர்த்து உட்கொள்ளும் போது, அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
குறிப்பாக ஒருசில உணவுகளை உண்பதற்கு முன் அல்லது பின் பாலை குடித்தால், அது உடலுக்கு பெரும் தீங்கை உண்டாக்கும்.
தற்போது பாலுடன் சேர்த்து சாப்பிடகூடாதா உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு அவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லதாகும்.
- மீனுடன் பால், தயிர் போன்ற பால் பொருட்களை சேர்த்து உட்கொள்ளக்கூடாது. னெனில் மீனில் புரோட்டீன் அதிகம் உள்ளது மற்றும் இது உடலில் சூட்டை அதிகரிக்கும். இதனால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளான ஃபுட் பாய்சனிங், அஜீரண கோளாறு, அடிவயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
- உளுத்தம் பருப்புடன் பாலை உட்கொள்ளும் போது, செரிமான செயல்முறை மோசமாக பாதிக்கப்பட்டு, அடிவயிற்று வலி, வாந்தி மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை சந்திக்கலாம்.
- ஆரஞ்சு, கிரேப்ஃபுரூட், எலுமிச்சை, லிச்சி போன்ற சிட்ரஸ் பழங்களுடன் பால் பொருட்களை எப்போதும் சேர்த்து உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் சிட்ரஸ் பழத்தில் உள்ள அமிலம் பாலை திரிய வைத்து, வயிற்றில் நச்சு பொருட்களாக மாறி, மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
- நீங்கள் சாப்பிடும் உணவுகளில் எள்ளு மற்றும் உப்பு இருந்தால், அந்த உணவை உண்டதும் அல்லது உண்பதற்கு முன் பால் மற்றும் தயிரை குறைந்தது 2 மணிநேரமாவது சாப்பிடாமல் இருங்கள். ஏனெனில் இது சரும பிரச்சனைகளை உண்டாக்கி தீவிரமாக்கும்.
- பலாப்பழம், பாகற்காய் போன்றவற்றை உட்கொண்ட பின் பால் அல்லது தயிர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றினால் , படர்தாமரை, சிரங்கு, அரிப்பு, எக்சிமா, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகள் வரலாம்.
- பாலை எப்போதும் உப்பு மற்றும் புளிப்பான உணவுப் பொருட்களுடன் சேர்த்து உட்கொள்ளக்கூடாது. இது தவிர, முள்ளங்கி உள்ள உணவை உண்ட பின்னரும் பாலை உடனே குடிக்கக்கூடாது. ஏனெனில் இவ்வாறு செய்தால், பால் உடலினுள் நஞ்சாக மாறி, சருமம் தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும்