இந்த பழத்தை சாப்பிட்ட பிறகு எப்போதும் தண்ணீர் குடிக்காதீங்க!
நம்மில் பலருக்கு எந்தவொரு பழத்தை சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிப்பது வழக்கம். அவ்வாறு செய்வதால் உடல் ரீதியாக பல தீமைகள் ஏற்படும் என்று அறிந்துள்ளீர்களா?
ஆம். ஒரு சில பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீரை குடித்தால் அது உடலிற்கு தீங்கை ஏற்படுத்தும்.
ஆகவே எந்த பழத்தை சாப்பிட்டால் என்ன நடக்கும் என தெரிந்துக்கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும்.
வாழைப்பழம்
நாம் அனைவரும் வழமையாக சாப்பிடும் ஒரே பழம் வாழைப்பழம் தான். அதில் மக்னீஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்து இருப்பதால், அதை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது உடலை பாதிக்கும்.
தர்பூசணி
தர்பூசணியை வழமையாக தண்ணீர் சத்து கிடைக்க வேண்டும் என்று தான் சாப்பிடுவார்கள். இதில் அதிகளவிலான நீர் சத்து இருப்பதால், சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சினை மற்றும் வயிற்கு வீக்கமும் ஏற்படும்.
மாம்பழம்
இதில் அதிகளவும் என்ஸைமஸ் இருப்பதால், இது செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும்.
பப்பாளி
பப்பாளி பழத்தில் Papin என்கிற என்சைம் இருக்கின்றது. இதை சாப்பிட்டு தண்ணீர் குடித்தால், வயிறு மந்தமாகி வயிற்றுப்போக்கும் ஏற்படும்.
அன்னாசி
அன்னாசி பழத்தில் Bromelain எனும் என்சைம் இருக்கின்றது. இது சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால், வயிறு சம்பந்தமான நிறைய பிரச்சினைகள் ஏற்படும்.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தில் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் காணப்படுகின்றது. இது சாப்பிடவுடன் தண்ணீரை குடித்தால், வயிற்றில் வீக்கம் ஏற்படுவதோடு வயிற்று சம்பந்தமான வேறு பிரச்சினைகளும் வரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |