இந்த பிரச்சினை இருப்பவர்கள் ஆட்டிறைச்சி சாப்பிடவே கூடாது - ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்
பொதுவாகவே அனைவரும் சுறுசுறுப்பான வாழ்க்கையை தான் விரும்புவார்கள். அதற்கு முதலில் தேர்ந்தெடுப்பது ஆரோக்கியமான உணவாக தான் இருக்கும்.
சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்வதே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
உடலிற்கு அனைத்து சத்துகளையும் அதிகமாக வழங்கக் கூடிய இறைச்சி என்றால் அது ஆட்டிறைச்சியாக தான் இருக்கக் கூடும்.
இது நம் உடல் உறுப்புகளுக்கு பல வழிகளில் நன்மைகளை வழங்குகிறது. அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் மக்களின் மத்தியில் இந்த ஆட்டிறைச்சி சிறப்பான தேர்வாக இருக்கிறது.
இது சாப்பிடுவதனால் உடலிற்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கிறது. கண்பார்வையை மேம்படுத்துவதில் இருந்து, ரத்த சோகை நீக்குவது வரை பல நன்மைகளை ஆட்டிறைச்சி வழங்குகிறது.
ஆட்டிறைச்சியில் உள்ள சத்துக்கள்
ஆட்டிறைச்சியில் அதிக இரும்புச்சத்து உள்ளது. 100 கிராம் கோழி இறைச்சியில் 1.7 மி.கி இரும்புச்சத்து இருக்கும்.
100 கிராம் இளம் ஆட்டிறைச்சியில் சுமார் 3.8 மி.கி.இரும்புச்சத்து இருக்கும்.
ஆட்டிறைச்சியில் பொட்டாசியம் அளவு மிக அதிகமாக உள்ளது. சோடியம் அளவு குறைவாக உள்ளது. இது உடலில் பொட்டாசியம் மற்றும் சோடியத்தின் அளவை பராமரிக்க உதவும்.
ஆட்டிறைச்சியில் வைட்டமின் பி12 இருக்கிறது. இதுஆரோக்கியமான ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு அவசியமான ஊட்டச்சத்து ஆகும்.
இது எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கிறது. கண் பார்வையும் சீராக இருப்பதற்கு உதவுகிறது.
இது பலருக்கும் பல வகைகளில் உதவுகிறது. இந்நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஒன்றின் மூலம் ஆட்டிறைச்சியை குறிப்பிட்ட ஒரு சிலர் சாப்பிடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் நிறைவுற்ற கொழுப்பு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
அந்நேரத்திலேயே நிறைவுறா கொழுப்பு உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
அந்தவகையில் ஆட்டிறைச்சியில் நிறைவுறா கொழுப்பு அதிகமாக காணப்படுவதால் இது சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் என தெரியவந்துள்ளது.
மேலும் ஒரு நாளைக்கு 250 கிராம் ஆட்டிறைச்சியை உண்ணலாம். ஆனால் 200mg-க்கு மேல் கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்கள் இதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |