இவற்றையெல்லாம் கடைப்பிடிக்கவில்லை என்றால் வீட்டிற்கு சரியில்லையாம்!!
Astrology
By Kirthiga
ஆன்மிகம் தகவல்களான வாஸ்து சாஸ்த்திரம், பரிகாரங்கள் மற்றும் பூஜைகள் போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.ஆன்மிகத்தை பொருத்தவரை சில பரிகாரங்களை முறையாகச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நாம் பரிகாரங்களை செய்யும்போது அவை பலன் அளிக்க வேண்டுமென்றால், பின்வரும் வழிமுறைகளை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது,
-
பொதுவாகவே ஒரு நாளை தொடங்குவதற்கு முன்பு, ஏதாவது ஒரு மந்திரத்தை ஜெபிப்பது நல்லது இப்படி மந்திரத்தை உச்சரித்த உடன், ஒரு டம்ளர் இளநீர் குடித்தால், ஜெபித்த மந்திரத்தின் பலனை உடனடியாக பெற்றுவிடலாம் என்று சாஸ்திரத்திம் கூறுகின்றது.
-
சனிக்கிழமைகளில் நவதானிய அடைதோசையை நல்லெண்ணெய் விட்டு, சுட்டு சாப்பிட்டால் நவகிரகங்கள் திருப்தி அடையும்.
- வீடு, வாசல், சொந்தம், பந்தம், தொழில் இவைகளை இழந்தவருக்கு அன்னதானம் அளிப்பது மிகவும் சிறந்ததாகும்.
-
வீட்டிற்கும் சாம்பிராணி புகை போடுவது நல்லது.
-
புதன்கிழமை அன்று உங்களது வீட்டிலிருந்து ஆடை, ஆபரணங்கள், பொன்பொருள் இவைகளை யாருக்கும் கொடுக்கக் கூடாது.
- வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை யாருக்கும் அரிசி, நெல், கோதுமை போன்ற எந்த ஒரு உணவு தரக்கூடாது.
-
கடன் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து, 16 நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்ய வேண்டும்.
-
கணவனின் அன்பை முழுமையாக மனைவி பெற விசாக நட்சத்திரத்தில் மனைவி விரதமிருந்து, முருகப் பெருமானையும் வள்ளியையும் வணங்க வேண்டும்.
- கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது.
- கர்ப்பமான பெண்கள் உக்ரமான தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது.
- பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும்.
- திருமணம் ஆன பெண்கள் ஒரே விரலில் இரண்டு மூன்று மெட்டி அணியக்கூடாது.
- கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.
- வெள்ளி, செவ்வாயில் பெண்கள் தலைக்கு குளித்தல் சிறப்பானதாகும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US