காலில் ஏற்படும் சீல் புண்கள் விரைவில் குணமாக வேண்டுமா? இதோ சில எளிய மருத்துவம்
கால் புண்கள் என்பது பொதுவாக இருந்தாலும் பெரும் சிக்கல் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
வழக்கமாக, புண்கள் குணமடைதல் என்பது செல்லுல்புற அணியை படிப்படியாக சரிசெய்யக்கூடிய செயல்முறையே. இருப்பினும், சில நோய்கள், புண்கள் குணமடைவதற்கான இயற்கை செயல்முறையில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. எனவே இவற்றை இயற்கை முறையில் நீக்குவது நல்லது.
அந்தவகையில் தற்போது காலில் ஏற்படும் சீல் புண்களை குணமாக்க கூடிய ஒரு சூப்பரான வைத்திய முறை ஒன்றை இங்கு பார்ப்போம்.
தேவையான பொருள்
- சின்ன வெங்காயம் 6
- வெள்ளை எள்ளு 5 கிராம்
- கருப்பு எள்ளு 5 கிராம்
- உப்பு - சிறிதளவு
- மஞ்சள் தூள் சிறிதளவு
- வேப்பம் இலை 10
செய்முறை
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு கருப்பு எள்ளு மற்றும் வெள்ளை எள்ளு இரண்டையும் 10 மணிநேரம் நீரில் நன்கு ஊற வைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
ஊற வைத்த கருப்பு எள்ளு மற்றும் வெள்ளை எள்ளு உடன் சின்ன வெங்காயம்,உப்பு,மஞ்சள் தூள்மற்றும் வேப்பம் இலை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த பொருட்களை கால் முழுவதும் தொடர்ந்து 15 நாட்கள் பூசி வர காலில் ஏற்படும் சீல் புண்கள் விரைவில் குணமாகும்.