"காதலர் தின பரிசாக ரெட் ரோஸ் கொடுக்காதீங்க.." காதல் நகரமான பாரிஸிலேயே பிரச்சாரம் செய்யும் பெண்!
காதல் நகரம் என அழைக்கப்படும் பாரிஸில் பிரபலமான ஓன்லைன் பூக்கடை வியாபாரி ஒருவர் காதலர் தினத்தை கொண்டாட வெளிநாட்டு ரோஜா பூக்களை பரிசாக கொடுக்காதீர்கள் என பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் காதலர்கள் வழக்கமாக ரோஜா பூக்களை பரிசாக கொடுத்து வருகினற்னர். உலகிலேயே பிப்ரவரி மாதத்தில் தான் அதிக அளவு பூக்கள் விற்பனையாகிறது.
ஆனால், பிரான்ஸ் நாட்டில் உள்ள காதல் நகரமான பாரிஸில் உள்ள பிரபலமான Fleurs d’Ici எனும் ஓன்லைன் பூக்கடை வியாபாரியான Hortense Harang (46), தனது வாடிக்கையாளர்களிடம் ரோஜா பூக்களுக்கு பதிலாக வேறு சில அழகிய உள்ளூர் பூக்களை பரிந்துரைத்துவருகிறார்.
அதற் காரணம், இந்த பருவத்தில் ரோஜாக்கள் நம் அட்சரேகைகளின் கீழ் வளர்வதில்லை, அதனால் பிரான்சில் விற்கப்படும் பெரும்பாலான ரோஜாக்கள் கென்யா, நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து விமான சரக்கு மூலம் இறக்குமதி செய்யப்பட வேண்டும், இதன் விளைவாக காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கும் கார்பன் உமிழ்வு அதிகளவில் ஏற்படுகிறது என அவர் கூறுகிறார்.
இவ்வாறு உலகின் மற்றோரு பக்கத்திலிருந்து குறிப்பிட்ட மாதத்தில் இவ்வளவு பூக்களை இறக்குமதி செய்வது தர்க்கரீதியானதல்ல என்கிறார்.
இவரது புதிய சுற்றுச்சூழல் பிரச்சாரத்துக்கு ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.