கமல் பேசியதை அரசியலாக்க வேண்டாம்.., கர்நாடகா துணை முதலமைச்சர் ஆதரவு
கன்னட மொழி குறித்து நடிகர் கமல் ஹாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆதரவு தெரிவித்துள்ளார்
கமலுக்கு ஆதரவு
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக்லைஃப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்துள்ளார். இதற்கான 'புரோமோஷன்' நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிய கமல், "தமிழில் இருந்து தான் கன்னடம் உருவானது" என்றார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறுகையில், "நடிகர் கமல் ஹாசன் பேசியதை அரசியலாக்க வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அண்டை மாநிலங்கள்.
நாம் இருவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து பலரும் கர்நாடகாவுக்கு வந்து வேலை செய்கிறார்கள். அதேபோல இங்குள்ள தண்ணீர் அங்கெ செல்கிறது.
நாம் இருவரும் எதிரிகள் அல்ல, நண்பர்கள். மொழி விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்குத் தெரியாது. ஆனால், இந்த பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |