வெகுநேரமாக ஒலித்த வீட்டு வாசல் அழைப்பு மணி! கெமராவில் உரிமையாளர் கண்ட அதிர்ச்சி காட்சியின் வீடியோ
வெகுநேரமாக ஒலித்த வீட்டு வாசலில் இருந்த அழைப்பு மணி.
கெமராவை பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.
அமெரிக்காவில் வீட்டு அழைப்பு மணியை யாரோ வெகுநேரமாக அடித்த நிலையில் கெமராவை பார்த்த போது பெரிய பாம்பு, மணியை அடித்ததை பார்த்து உரிமையாளர் அதிர்ச்சியைடைந்தார்.
Kechi, Kansas-ஐ சேர்ந்தவர் Mackenze Bullins. இவர் வீட்டு வாசலில் உள்ள அழைப்பு மணியை நேற்று வெகுநேரமாக யாரோ அடித்தபடி இருந்தனர். இதையடுத்து கெமராவை பார்த்த போது பெரிய பாம்பு ஒன்று அழைப்பு மணியை அழுத்தி கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
பின்னர் பாம்பை அப்பறப்படுத்த உதவி கோரினார் Mackenze . இதையடுத்து பாம்பு அங்கிருந்து சென்றுள்ளது. Mackenze கூறுகையில், எங்கள் பகுதியில் பாம்புகள் நிறைய இருக்கும்.
குறித்த பாம்பு rat snake ஆகும். அவை பெரும்பாலும் பறவையின் முட்டைகளை உண்கின்றன, எனவே அவை மரங்களிலும் கோழிக் கூடுகளிலும் காணப்படுவது பொதுவானது.
இவ்வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டதில்லை என்றாலும் கடிக்கும் என கூறியுள்ளார்.