இட்லி உப்புமாவை போலவே தோசையிலும் உப்புமா செய்யலாம்
தோசை உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் ஒரு உணவாகும்.
தோசைக்கு சட்னி, சாம்பார், இட்லி பொடி என அனைத்துக்கும் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
தமிழக மக்களால் அதிகளவில் விரும்பி உண்ணக்கூடிய உணவுகளில் தோசையும் ஒன்று.
தோசையில் உப்புமா செய்து சாப்பிட்டால் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.
தேவையானப் பொருட்கள்
- கல் தோசை – 3
- கடுகு
- உளுந்தம் பருப்பு
- வெங்காயம் – 2
- தக்காளி – 1
- இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள்
- தனி மிளகாய் தூள்
- மிளகு தூள்
- கரம் மசாலா தூள்
- பச்சை மிளகாய் – 4
- கொத்தமல்லி
- கறிவேப்பிலை
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் கல்தோசையை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு கடுகு, உளுந்தப்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும் .
வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போதும் வரை வதக்கிய பின் தக்காளியை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்று வதக்கவும்.
இவையனைத்தும் நன்றாக வதங்கியதும், வெட்டி வைத்துள்ள தோசையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
தோசை மசாலாவுடன் நன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழையைத் தூவி கீழே இறக்கவும். சூப்பரான தோசை உப்புமா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |