7 சிக்ஸர்களை பறக்கவிட்டு 69 ஓட்டங்கள் விளாசிய வீராங்கனை! வாணவேடிக்கை வீடியோ
பார்மி ஆர்மி அணி வீராங்கனை 7 சிக்ஸர்கள் விளாசி, 48 பந்துகளில் 69 ஓட்டங்கள் குவித்தார்.
டோட்டின் ருத்ர தாண்டவம்
Fair break மகளிர் டி20 தொடரின் இன்றைய போட்டியில் பார்மி ஆர்மி மற்றும் வாரியர்ஸ் வுமன் அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் ஆடிய பார்மி ஆர்மி அணி 6 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடியில் மிரட்டிய மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த டீன்ட்ரா டோட்டின் வணவேடிக்கை காட்டினார். அவர் 48 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் விளாசினார்.
?????
— England's Barmy Army (@TheBarmyArmy) April 9, 2023
pic.twitter.com/a2cL9pRoBv
வாரியர்ஸ் வுமன்
ருமானா அகமது 28 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்னர் களமிறங்கிய வாரியர்ஸ் வுமன் அணி 20 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக கேத்தரின் பிரைஸ் 26 பந்துகளில் 45 ஓட்டங்களும், ஹேலே மேத்யூஸ் 18 பந்துகளில் 28 ஓட்டங்களும் எடுத்தனர். பார்மி ஆர்மி தரப்பில் தாரா நோரிஸ் மற்றும் டோட்டின் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
? | FAIRBREAK INNINGS
— England's Barmy Army (@TheBarmyArmy) April 9, 2023
Scores of 69 from the World Boss and 37 from Rumana help us to finish on 163-6 ?#FBI23 pic.twitter.com/znaBoXefSJ