தொடர்ந்து மூன்று மரணங்கள்...இரட்டைக்கொலை வழக்குத் தொடர்ந்துள்ள பொலிசார்: பிரித்தானியாவில் ஒரு பரபரப்பு சம்பவம்.
வட அயர்லாந்தில் தொடர்ந்து இரண்டு வீடுகளில் மூன்று மரணங்கள் நிகழ்ந்துள்ளதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Newtownabbey என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டில் கத்திக்குத்து சம்பவம் ஒன்று குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு ஒரு பெண் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையில், மருத்துவ உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பயன் தராமல், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதே பகுதியிலுள்ள மற்றொரு வீட்டில் ஒரு ஆண் சுயநினைவின்றிக் கிடப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அங்கும் பொலிசார் சென்றுள்ளனர்.
அவருக்கும் மருத்துவ உதவிக்குழுவினர் கொடுத்த முதல் உதவி பலன் தராமல், அவரும் உயிரிழந்தார்.
அந்த வீட்டை பொலிசார் ஆராய்ந்தபோது, அங்கு ஒரு பெண் இறந்துகிடப்பது தெரியவந்தது.
இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக பொலிசார் கருதுகின்றனர்.
பொதுமக்களில் யாருக்காவது இந்த சம்பவங்கள் குறித்து ஏதாவது தகவல் தெரிந்தால் தங்களை அணுகுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

