இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண்கள் இரட்டைக்கொலை: கொலையாளி யார் எனத் தெரிந்தது
இங்கிலாந்தில் உள்ள வீடு ஒன்றில், இந்திய வம்சாவளியினர்களாகிய தாய் மற்றும் மகள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டார்கள்.
தற்போது, கொலை செய்தவர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியினர்களாகிய தாய் மற்றும் மகள் கொல்லப்பட்ட வழக்கில் சில புதிய தகவல்கள் பொலிசாரால் வெளியிடப்பட்டுள்ளன.
செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Great Waldingfield என்னும் இடத்தில், வீடு ஒன்றில் ஏதோ பிரச்சினை என பொலிசாருக்குத் தகவலளிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் அங்கு விரைந்தபோது, ஒரு தாயும் மகளும் உயிரிழந்து கிடந்தனர். அதே வீட்டில் பலத்த காயங்களுடன் ஒரு ஆண் சிக்கினார்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பெயர் Jillu Nash (44). அவரது பெற்றோர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். மற்றொரு பெண், Louise Nash (12), அவர் Jilluவின் மகள். அவர் ஆட்டிஸக் குறைபாடு கொண்டவர்.
பிரேதப் பரிசோதனையில், Jillu கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டதும், Louise வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டதும் தெரியவந்தது.
தற்போது கொலையாளி குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. அவரது பெயர் Peter Nash. அவர் Jilluவின் கணவர், Louiseஇன் தந்தை.
அவர் எதற்காக தன் மனைவி மற்றும் மகளைக் கொலை செய்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
Peter மீது இரண்டு கொலைக்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று அவர் Ipswich மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்