வெளிநாட்டவர்களுக்கு இரட்டை தண்டனை: விரைவில் பிரான்ஸ் கொண்டுவர இருக்கும் சட்டம்
குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு இரட்டை தண்டனை விதிக்க பிரான்ஸ் திட்டமிட்டு வருகிறது.
13 வயதாவதற்கு முன் பிரான்சுக்கு வந்த வெளிநாட்டவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் நாடுகடத்தப்படுவதற்கு தடையாக இருக்கும் விதியை அகற்றும் வகையில் செப்டம்பர் மாதத்தில் மசோதா ஒன்றைக் கொண்டுவர இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அரசு குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள் மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்த Darmanin, ஏற்கனவே சட்டத்தை மீறிய 70,000 வெளிநாட்டவர்களின் குடியிருப்பு அனுமதி ரத்துசெய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
Pic: Obatala-photography / Shutterstock
ஜனவரி முதல் இதுவரை சுமார் 9,800 வெளிநாட்டவர்கள் பிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் பெருந்தன்மை உடையதுதான், வெளிநாட்டவர்களை எங்கள் நாட்டில் வாழ நாங்கள் இருகரம் நீட்டி வரவேற்கவும் செய்வோம். ஆனால், விதிகளை மதிக்கவேண்டும், விதிகளை மதிக்கவில்லை என்றால், நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிடவேண்டும் என்பது சாதாரண மனிதனுக்குக் கூட தெரிந்த அடிப்படை விடயம் என்கிறார் Darmanin.
ஆகவே, குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவதுடன், நாடுகடத்தவும் படுவார்கள் என்பதுதான் Darmanin கொண்டு வர இருக்கும் இரட்டை தண்டனை ஆகும்.